
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே சில புறநகர் மின்சார ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பராமரிப்பு மற்றும் பிற காரணங்களுக்காக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.
இதன்படி, இன்று (நவ.22) முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 14 புறநகர் மின்சார ரயில்கள் சேவைகளும், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே 14 புறநகர் மின்சார ரயில்கள் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாற்றத்தை முன்வைத்து சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளுக்கான புதிய அட்டவணையை அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே மண்டலத்தின் சென்னை பிரிவு.
மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பிராட்வே முதல் தாம்பரம் வரையிலும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், என இந்த இரு வழித்தடங்களில் தலா 10 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.