ரயில்வே மேம்பாட்டு பணிகள்: பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் சேவை ரத்து!

சென்னை கடற்கரை - பல்லாவரம், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு வரை ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் சேவை ரத்து!
பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் சேவை ரத்து!
1 min read

ரயில்வே மேம்பாட்டு பணிகள் காரணமாக பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவைக்கு உதவும் வகையில் புறநகர் ரயில்கள் செயல்பட்டு வருகிறது. புறநகர் ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 14 வரை ரயில்வே மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையே காலை 9.30 - 1.30 வரை ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்சொன்ன நாள்களில் குறிப்பிட்ட நேரத்தில் சென்னை கடற்கரை - பல்லாவரம், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் ரயில்கள் இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை ரத்து செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in