ஆர்சிபி மீது அவதூறு: ரோஹித் ரசிகரை கொன்ற கோலி ரசிகருக்கு ஆயுள் தண்டனை | Ariyalur |

மது அருந்த அழைத்து, கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்ததாகத் தகவல்...
ஆர்சிபி மீது அவதூறு: ரோஹித் ரசிகரை கொன்ற கோலி ரசிகருக்கு ஆயுள் தண்டனை | Ariyalur |
ANI
1 min read

அரியலூர் அருகே ஆர்சிபி அணியைப் பற்றி அவதூறாகப் பேசியதால் ரோஹித் சர்மாவின் ரசிகரை அடித்துக் கொலை செய்த கோலி ரசிகருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூரை அடுத்த கீழப்பழூரைச் சேர்ந்தவர் விக்னேஷ். 25 வயதாகும் இவர், கிரிக்கெட் வீரரான ரோஹித் சர்மாவின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது. மேலும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் விராட் கோலியின் ரசிகர் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஐபிஎல் அணி சார்பில் அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு என்று அப்பகுதியில் கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் கோலியையும் அவர் சார்ந்த ஆர்சிபி அணியையும் விக்னேஷ் அவதூறாகப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தர்மராஜ், விக்னேஷை மது அருந்த அழைத்து, கிரிக்கெட் பேட்டால் விக்னேஷின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழப்பழூர் காவல்துறையினர், விக்னேஷ் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்ததோடு, தர்மராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலாண்டினா விசாரித்து, விராட் கோலி ரசிகர் தர்மராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Rohit fan murdered | RCB fan attack Rohit fan | Ariyalur

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in