குற்றாலம்: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குற்றாலம்
குற்றாலம்ANI

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், இன்று குற்றால அருவியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. அப்போது அங்கு குளித்து கொண்டிருந்த 17 வயதான அஸ்வின் என்ற இளைஞர் அடித்து செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். இதன் பிறகு தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் அங்கு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன அந்த இளைஞர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in