
தமிழக பாஜகவிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 12 அன்று தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன் தமிழக பாஜகவிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூலை 30) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, எம். சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, பி. கனகசபாபதி, டால்பின். ஸ்ரீதர், ஏ.ஜி. சம்பத், ஆர்.சி. பால் கனகராஜ், ஆர்.என். ஜெயபிரகாஷ், மா. வெங்கடேசன், கே. கோபால்சாமி, குஷ்பு, என். சுந்தர் ஆகியோர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொன் வி. பாலகணபதி, பேராசிரியர் ராம. சீனிவாசன், எம். முருகானந்தம், பி. கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் மாநில பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கராத்தே தியாகராஜன், மீனா தேவ் வினோஜ் பி. செல்வம், ஏ. அஸ்வத்தாமன், அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் மாநில செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளராக கேசவ விநாயகனும், மாநில பொருளாளராக எஸ்.ஆர். சேகரும் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில இணை அமைப்பாளர்களாக கே.டி. ராகவனும், எம். நாச்சியப்பனும் நியமனம்.
குறிப்பாக, மாநில தலைமை செய்தித் தொடர்பாக நாராயணன் திருப்பதியும், மாநில இளைஞரணித் தலைவராக எஸ்.ஜி. சூர்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.