கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி காலவரையின்றி மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடையே சாதி ரீதியாகவும், பெண்களைத் தரக்குறைவாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி மாணவர்கள் வலியுறுத்தியும், அவர் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாணவர்கள் பலரும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையறையின்றி முடப்படுகிறது என்று கல்லூரி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.