கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட கழுகுகளின் காடு புத்தகத்துக்கு தமிழக அரசு விருது

இந்த நூலில் கழுகுக் கூடுகளைத் தேடிச் சென்ற தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் சந்துரு. கழுகுகளின் உலகை இவ்வளவு நெருக்கமாக ஆராய்ந்த இன்னொரு புத்தகம் தமிழில் இல்லை
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட கழுகுகளின் காடு புத்தகத்துக்கு தமிழக அரசு விருது
1 min read

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட எழுத்தாளர் சந்துரு (எ) சந்திரசேகரனின் `கழுகுகளின் காடு’ புத்தகத்துக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்துள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளாக இயற்பியலாளர் சந்துரு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மோயாறு பள்ளத்தாக்குப் பகுதியில் கழுகுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பகுதியில் தென்னிந்தியாவில் காணப்படும் நான்கு வகைக் கழுகினங்கள் உள்ளன.

இந்த `கழுகுகளின் காடு’ புத்தகத்தில் கழுகுக் கூடுகளைத் தேடிச் சென்ற தன் காட்டு அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் சந்துரு. இந்த புத்தகத்தில் காட்டில் தனக்கு ஏற்பட்ட சாகச அனுபவங்களையும், பழங்குடி இனத்தவரின் காட்டறிவையும், அயல் நாட்டு ஊடுருவு களைத்தாவரங்கள் பற்றியும் அவர் பதிவு செய்துள்ளார். கழுகுகளின் உலகை இவ்வளவு நெருக்கமாகச் சென்று ஆராயும் இன்னொரு புத்தகம் தமிழில் இல்லை.

கிழக்கு பதிப்பகம் பதிப்பித்த இந்த `கழுகுகளின் காடு’ புத்தகம் 2022-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்கான திட்டத்தில், சுற்றுப்புறவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in