தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி தண்ணீரைத் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

தமிழ்நாட்டுக்குக் காவிரியிலிருந்து 2.5 டிஎம்சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக மாநில அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். காவிரியிலிருந்து மே மாதத்துக்கான 2.5 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

மேகேதாட்டு அணை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் ஜூனில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மே 16-ல் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 96-வது கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் மே மாதம் வரை 10 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு 3.8 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டது. எனவே, நிலுவையில் உள்ள 6.2 டிஎம்சி தண்ணீர் மற்றும் ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. எனினும், தமிழ்நாட்டுக்குக் காவிரியிலிருந்து 2.5 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in