கழுதைகளைக் காணவில்லை என்று கவலைப்பட்டீர்களா? - தெருநாய் பிரச்னைக்கு கமல் கருத்து | Kamalhassan |

எல்லா உயிர்களையும் முடிந்த அளவு காப்பாற்ற வேண்டும் என்றும் பேச்சு...
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://x.com/ikamalhaasan
1 min read

தெருநாய் பிரச்னைக்கு உரிய தீர்வு குறித்த கேள்விக்கு அனைத்து உயிர்களையும் நம்மால் முடிந்த வரை காப்பாற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

துபாயில் திரைப்பட விருது வழங்கும் விழாவுக்குச் செல்வதற்கான சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ராஜ் கமல் நிறுவனம் தயாரித்த அமரன் திரைப்படத்திற்கு விருதுகள் கிடைத்துள்ளன. எனக்கும் தெலுங்கில் படம் ஒன்றுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதை வாங்குவதற்காக துபாய் செல்கிறேன்” என்று குறிப்பிட்டார். பிரதமரின் தாய் அவமதிக்கப்பட்டதாக எழுந்த விவகாரம் குறித்த கேள்விக்கு யாரும் யாரையும் அவமதிப்பான வகையில் பேசக்கூடாது என்று கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து, தெருநாய் பிரச்னை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ”வரலாறு தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னவென்று தெரிந்தவர்கள் யாரேனும் கழுதைகள் எங்கே என்ற கேள்வியை எழுப்பினார்களா? அவை நமக்காக எவ்வளவு பொதி சுமந்து இருக்கின்றன. அதைக் காணவில்லை என்று கவலைப்பட்டோமா? அதுபோல்தான் தெருநாய்களும். நாம் எல்லா உயிர்களையும் முடிந்த அளவு காப்பாற்ற வேண்டும்” என்று கூறினார்.

Kamal Haasan | Stray Dog | Stray Dogs Issue | Dog Issue | Makkal Needhi Maiam |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in