கமல் ஹாசனின் சொத்து மதிப்பு ரூ. 305 கோடி!

2023-24-ல் அவருடைய வருவாய் ரூ. 78.9 கோடியாக உயர்ந்துள்ளது.
கமல் ஹாசனின் சொத்து மதிப்பு ரூ. 305 கோடி!
படம்: https://x.com/Udhaystalin
2 min read

மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த கமல் ஹாசன் தனது சொத்து மதிப்பு ரூ. 305.55 கோடி என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கமல் ஹாசன் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலில் தனது சொத்து மதிப்பு ரூ. 305.55 கோடி என கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

2019-2020-ல் கமல் ஹாசனின் வருவாய் ரூ. 22.1 கோடியாக இருந்தது. இதுவே 2023-24-ல் அவருடைய வருவாய் ரூ. 78.9 கோடியாக உயர்ந்துள்ளது.

2021-ல் கமல் ஹாசனின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 45.09 ஆக இருந்தது. இதுவே ஏறத்தாழ ரூ. 15 கோடி அதிகரித்து அசையும் சொத்துகளின் தற்போதைய மதிப்பு ரூ. 59.69 கோடியாக உள்ளது. அவருடைய அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 245.86 கோடியாக உள்ளது. 2021-ல் கமல் ஹாசனின் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 131.84 கோடி.

கமல் ஹாசனுக்குச் சொந்தமாக நான்கு வணிகக் கட்டடங்கள் உள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 111.1 கோடி. மேலும், திண்டுக்கலில் விவசாய நிலத்தைச் சொந்தமாக வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 22.24 கோடி. அவருக்கு ரூ. 49 கோடி கடன் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இதில் எந்த மாற்றமும் இல்லை.

கமல் ஹாசனின் சொத்து விவரங்கள்

  • அசையும் சொத்துகள் - ரூ. 59.69 கோடி

  • அசையா சொத்துகள் - ரூ. 245.86 கோடி

  • மொத்த சொத்து மதிப்பு - ரூ. 305.55 கோடி

  • கடன் - ரூ. 49.67 கோடி

2023-24-ல் கமல் ஹாசனின் வருவாய் - ரூ. 78.9 கோடி

அசையும் சொத்து விவரங்கள்

  • ரொக்கப் பணம் - ரூ. 2.60 லட்சம்

  • வைப்புத் தொகை மற்றும் இருப்புத் தொகை - ரூ. 29.36 லட்சம்

  • மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை மற்றும் இதர முதலீடுகள் - ரூ. 5.50 கோடி

  • பொதுக் காப்பீடு - ரூ. 10 லட்சம்

  • ஜிஎஸ்டி, கடன் உள்ளிட்டவை மூலம் வர வேண்டியது - ரூ. 43.75 கோடி

  • மஹேந்திரா பொலேரோ, மெர்சிடெஸ் பென்ஸ், பிஎம்டபிள்யு, லெக்ஸஸ் கார்கள் மதிப்பு - ரூ. 8.43 கோடி

  • நகைகள் - ரூ. 76.04 லட்சம்

  • இதர சொத்துகள் - ரூ. 81.08 லட்சம்

மொத்தம் - ரூ. 59.69 கோடி

அசையா சொத்து விவரங்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுக்காவில் 35.59 ஏக்கர் விவசாய நிலம்

தற்போதைய சந்தை மதிப்பு - ரூ. 22.24 கோடி

சென்னையில் 4 வணிகக் கட்டடங்கள்

தற்போதைய சந்தை மதிப்பு - ரூ. 111.12 கோடி

சென்னையில் இரு குடியிருப்புக் கட்டடங்கள்

தற்போதைய சந்தை மதிப்பு - ரூ. 112.5 கோடி

மொத்தம் - ரூ. 245.86 கோடி

Attachment
PDF
S.Kamalhaasan
Preview

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in