
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எம்.எஸ். பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அரசு மருத்துவமனையில் 26 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள். கள்ளச்சாராயம் அருந்தியது உயிரிழப்புக்குக் காரணம் எனத் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், உறுதி செய்யப்பட்ட பிறகே கள்ளச்சாராயம் தான் உயிரிழப்புக்குக் காரணமாக என்பது தெரியவரும் என செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது, பிறகு 7 ஆக உயர்ந்தது. தற்போது உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி. சமய் சிங் மீனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழிச் செல்வன் உள்பட மொத்தம் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி ஆட்சியராக எம்.எஸ். பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ரஜத் சதுர்வேதி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், உயிரிழப்புக்குக் காரணம் பாக்கெட்டில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் வரை கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: