கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்: உயிரிழப்பு 55 ஆக அதிகரிப்பு!

“விஷச்சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்”.
கோப்புப் படம்
கோப்புப் படம்
1 min read

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் விஷச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்துள்ளார். சுரேஷின் இறுதிச்சடங்கிற்குச் சென்றவர்களில் பலர் பாக்கெட் விஷச்சாராயம் குடித்து, அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். விஷச்சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 55 நபர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று மருத்துவக்குழு ஆய்வு செய்து வந்த நிலையில், விஷச்சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in