
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் விஷச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்துள்ளார். சுரேஷின் இறுதிச்சடங்கிற்குச் சென்றவர்களில் பலர் பாக்கெட் விஷச்சாராயம் குடித்து, அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
விஷச்சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 39 நபர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. பலத்த மழை பெய்த காரணத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களில் 21 பேரின் உடல் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.