சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்
படம்: https://www.hcmadras.tn.nic.in/

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா நாளை ஓய்வு பெறுகிறார்.
Published on

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா நாளை ஓய்வு பெறுகிறார். இவருடைய ஓய்வுக்குப் பிறகு நீதிபதி மகாதேவன் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். இதுதொடர்புடைய அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

1963-ல் சென்னையில் பிறந்த ஆர். மகாதேவன், மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர். 1989-ல் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார். மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞராக இருந்துள்ள மகாதேவன் 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in