சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர். மஹாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. சென்னை உயர் நீதிமன்றம் தவிர்த்து 8 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் கடந்த ஜீலை மாதம் பரிந்துரை செய்தது.
கடந்த செப்டம்பர் 17-ல் இதில் மூன்று மாற்றங்களைச் செய்தது கொலீஜியம்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் உள்பட 8 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.