நடிகர் எஸ்.வி. சேகருக்கான சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
நடிகர் எஸ்.வி. சேகருக்கான சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு
நடிகர் எஸ்.வி. சேகருக்கான சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு@SVESHEKHER

எஸ்.வி. சேகருக்கான சிறைத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2018-ல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி. சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்திருந்தார். இதற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டிலேயே சிறப்பு நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திய எஸ்.வி. சேகர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, சிறைத் தண்டனையானது ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகருக்கான சிறைத் தண்டனையை நிறுத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மேலும் இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in