சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சாதிக் சகோதரர் கைது

ஜாபர் சாதிக் மேற்கொண்ட குற்றச்செயல்களில் அவரது குடும்பத்தினருக்கும் பங்கு இருக்கும் என்று கருதிய அமலாக்கத்துறை அவர்களிடம் விசாரணை மேற்கொண்டது
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சாதிக் சகோதரர் கைது
1 min read

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமைக் கைது செய்துள்ளது அமலாக்கத்துறை.

கடந்த மார்ச் 9-ல் திமுகவைச் சேர்ந்த ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை அடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஜாபர் சாதிக்கைக் கைது செய்தது அமலாக்கத்துறை. இதனைத் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கியது தில்லி உயர் நீதிமன்றம். ஆனால் அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் இருந்ததால் சிறையில் இருந்து ஜாபர் சாதிக் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஜாபர் சாதிக் மேற்கொண்ட குற்றச்செயல்களில் அவரது குடும்பத்தினருக்கும் பங்கு இருக்கும் என்று கருதிய அமலாக்கத்துறை அவர்களிடம் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

காவல் துறையால் கைது செய்யப்பட்ட முகமது சலீம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதை அடுத்து 15 நாட்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 27 வரை முகமது சலீமுக்கு நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in