அமெரிக்காவில் பெண் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை: இந்திய வம்சாவளி நபர் கைது | US Murder |

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவர் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது...
அமெரிக்காவில் பெண் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை: இந்திய வம்சாவளி நபர் கைது
அமெரிக்காவில் பெண் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை: இந்திய வம்சாவளி நபர் கைது
1 min read

அமெரிக்காவில் மனைவி உட்பட 4 பேரைச் சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள லாரன்ஸ்வில்லி நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கே ஒரு பெண் உட்பட 4 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டுள்ளனர். இதையடுத்து உடல்களைக் கைப்பற்றி, வீட்டுக்குள் தேடியுள்ளனர். அப்போது மூன்று சிறுவர்களை மீட்டுள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக கொலை

மேலும் வீட்டிற்குள் பதுங்கி இருந்த 51 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரையும் காவலர்கள் மீட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாராணையில் அவர் பெயர் விஜய் குமார் என்பது தெரிய வந்தது. அவரது வீட்டில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்படி கடந்த வெள்ளி அன்று ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், விஜய் குமார் தனது மனைவி மீனு தோக்ரா (43) மற்றும் உறவினர்கள் கௌரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவலர்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்திய துணைத் தூதரகம் இரங்கல்

இச்சம்பவத்திற்கு அட்லாண்டா நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இரங்கல் தெரிவித்து எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: "இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பின்னணியில் குடும்பத் தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இந்தியர் ஆவார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Indian Woman, 3 Relatives Shot Dead By Husband During Argument In US. The shooting left four people dead early Friday morning while three children were inside the home during the incident.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in