
தீபாவளியன்று மதுரை, திண்டுக்கல், சேலம் உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்கள் எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்டோபர் 30: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அக்டோபர் 31: தீபாவளியன்று மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1: கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தீபாவளிக்கு மறுநாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2: நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று நண்பகல் நேரத்தில் திடீரென கனமழை பெய்தது. சென்னை அண்ணா நகர் மேற்கில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. நியூ மணலி டவுன், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தரையில் 6 செ.மீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.