

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் கடந்த அக்டோபர் 21 அன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. பின்னர் மழை படிப்படியாகக் குறைந்ததை அடுத்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்தது.
இந்நிலையில் வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
“தென்கிழக்கு அரபுக் கடல் பகுதியில் காலை 5:30 மணி அளவில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The Indian Meteorological Department has reported that a new low-pressure area has formed in the Bay of Bengal.