இதயம் குழுமத்தின் தலைவர் வி.ஆர். முத்து காலமானார் | Idhayam | VR Muthu |

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
இதயம் குழுமத்தின் தலைவர் வி.ஆர். முத்து காலமானார்
இதயம் குழுமத்தின் தலைவர் வி.ஆர். முத்து காலமானார்
1 min read

புகழ்பெற்ற இதயம் குழுமத்தின் தலைவர் வி.ஆர் முத்து இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 68.

தமிழ்நாடு மட்டுமன்றி உலக அளவில் நல்லெண்ணெய் விற்பனையில் புகழ்பெற்ற இதயம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வி.அர். முத்து. இந்தக் குழுமத்தை நிறுவிய வி.வி.வி. ராஜேந்திரனின் மகன், வி.ஆர். முத்து.

தொழிலதிபர், இலக்கியவாதி, பேச்சாளர், ரோட்டரி சங்கத்தில் தன்னார்வ தொண்டர் எனப் பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்த வி.ஆர். முத்து, இதயம் நல்லெண்ணெய், பருப்பு வகைகள் உட்பட பல்வேறு பொருள்களின் விற்பனைக்காக தனித்துவமான விளம்பரங்களை உருவாக்கிப் புகழ்பெற்றார்.

கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த வி.ஆர். முத்து, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணி அளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 68. இதையடுத்து அவரது உடல், சொந்த ஊரான விருதுநகருக்கு இறுதி அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இதயம் குழுமம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் “எங்கள் அன்புக்குரிய தலைவர் வி. ஆர். முத்து ஐயா காலமானார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம். அவரது தலைமைத்துவமும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

Summary

VR Muthu, the chairman of the renowned Idhyam Group, passed away this afternoon. He was 68.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in