
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவான் இன்று காலமானார். அவருக்கு வயது 56.
2020-ல் கொரோனா பரவல் காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக பீலா பணியாற்றினார். அப்போது தினத்தோறும் செய்தியாளர் சந்திப்பின் மூலம் மக்களுக்கு கொரோனா பரவல் நிலவரத்தைத் தெரிவித்து அறிவுரை கூறி வந்தார். இதனால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
சென்னையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த பீலா வெங்கடேசன், 1997-ல் ஐஏஎஸ் அதிகாரி ஆனார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அவர் பணிபுரிந்துள்ளார்.
பீலா வெங்கடேசனின் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.