கேரளத்துக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் சேர்த்து பணியாற்றுவேன்: பாஜக எம்.பி சுரேஷ் கோபி

கேரளத்துக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் சேர்த்து பணியாற்றுவேன்: பாஜக எம்.பி சுரேஷ் கோபி

கர்நாடக மாநிலத்துக்கு நான் தேவைப்பட மாட்டேன். ஏனென்றால் அங்கு என்னைவிடப் பல திறமைசாலிகள் உள்ளனர்

`என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். திருச்சூர் எம்.பி.யாக மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தாலும் நான் திருச்சூருடன் நின்றுவிட மாட்டேன். எனவே முன்பு நான் கூறியபடி கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் சேர்த்து உழைப்பேன்!’ எனத் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார் மலையாள நடிகரும், கேரளாவிலிருந்து பாஜக எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளவருமான சுரேஷ் கோபி.

இது குறித்து மேலும் பேசிய சுரேஷ் கோபி, ‘கர்நாடக மாநிலத்துக்கு நான் தேவைப்பட மாட்டேன். ஏனென்றால் அங்கு என்னைவிடப் பல திறமைசாலிகள் உள்ளனர்’ என்றார்.

நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுனில் குமாரை 74000 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2019 மக்களவைத் தேர்தலில் இதே திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 1.21 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸின் பிரதாபனிடம் தோல்வியடைந்தார்.

2016-2022 வரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக சுரேஷ் கோபி செயல்பட்டுள்ளார். 65 வயதான சுரேஷ் கோபி 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in