இனி நானே பாமக தலைவர்: ராமதாஸ் அறிவிப்பு!

இதற்கு காரணங்கள் நிறைய உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது.
இனி நானே பாமக தலைவர்: ராமதாஸ் அறிவிப்பு!
1 min read

பாமக தலைவர் பொறுப்பை தாம் ஏற்றிருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று (ஏப்ரல் 10) செய்தியாளர்களை சந்தித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது,

`பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதோடு பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்கவேகூடாது என்று முதல்முறையாகக் குரல் கொடுத்து நானும், பாட்டாளி மக்கள் கட்சியும் போராடினோம். அதனால் நீட் ஒழிக்கப்படவேண்டும், நீக்கப்படவேண்டும் என்று யார் குரல் கொடுத்தாலும், அவர்களுக்கு என் ஆதரவு இருக்கும், போராட்டமாக இருந்தால் அதிலும் நாங்கள் கலந்துகொள்வோம். நீட் தேர்வு என ஒன்று இருக்கக்கூடாது.

இன்றைக்குத்தான் நான் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். நானே நிறுவனர் மற்றும் தலைவர். இனி நிர்வாகக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என அனைவரையும் அழைத்துப் பேசி முடிவெடுப்போம்.

இதற்கு காரணங்கள் நிறைய உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. சிறிது சிறிதாகப் பகிர்ந்துகொள்ளப்படும். கோடைக்காலம் வந்துவிட்டதால் மக்கள் அதிகம் தண்ணீர் குடிக்கவேண்டும். வடிகட்டிக் காய்ச்சிக் குடிக்கவேண்டும்’ என்றார்.

கடந்த டிசம்பர் மாதம், பாமக பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. அப்போது, கட்சியின் இளைஞரணித் தலைவர் நியமனத்தை முன்வைத்து ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே பொதுக்கூட்ட மேடையிலேயே மோதல் வெடித்தது.

இந்நிலையில், பாமக தலைவர் பொறுப்பை தற்போது ராமதாஸ் ஏற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in