நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: வாகனத்தை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: வாகனத்தை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

’நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். ஸ்டிக்கர், கருப்புக் கண்ணாடி ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும்’ என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவு.

சென்னையில் உள்ள தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட காவல்துறை விதித்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அரசியல் கட்சியனரின் வாகனங்களை எந்தவித பாராபட்சமும் இன்றி தமிழக அரசு பறிமுதல் செய்யவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை.

’இந்த வழக்கு மீதான விரிவான உத்தரவு ஜூன் 20 இல் வழங்கப்படும். அந்த தேதியில் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள தமிழக அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

தனியார் வாகனங்களில் தாங்கள் பணிபுரியும் துறை சார்ந்த ஸ்டிக்கர்கள், சின்னங்கள் உள்ளிட்டவற்றை ஒட்டுவதற்கு சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை கடந்த மே 2 முதல் தடை விதித்தது. இந்த தடையை மீறினால் முதல்முறை ரூ. 500, அடுத்தமுறை ரூ. 1500 அபராதமாக விதிக்கப்படும் எனவும் அப்போது அறிவித்தது சென்னை காவல்துறை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in