தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுறை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை இந்த எச்சரிக்கை பொருந்தும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் இன்று மழையை எதிர்பார்க்கலாம் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) தெரிவித்துள்ளார்.