தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுக்க தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால், சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, நவம்பர் 1-ஐ பொது விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக தீபாவளிக்கு முந்தைய நாளான நாளைய தினம் (அக்டோபர் 30) பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் நாளை (அக்டோபர் 30) முழுநாள் விடுமுறை அறிவித்து புதுவை அரசு உத்தரவிட்டது.