முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய வழக்கு என்பதால் எம்எல்ஏ, எம்பி-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
படம்: https://x.com/Vijayabaskarofl

முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு சிபிஐ நீதிமன்றத்திலிருந்து எம்எல்ஏ, எம்பி-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2016-ல் தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, காவல் துறை முன்னாள் டிஜிபி-க்கள், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது மாநில அரசின் அனுமதியைப் பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதால், இதை எம்எல்ஏ, எம்பி-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்குப் பரிந்துரை செய்தது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு எம்எல்ஏ, எம்பி-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in