சென்னையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக பசுமைப் பந்தல் அமைப்பு!

அண்ணா நகர், சென்ட்ரல், பாரிமுனை, ஓ.எம்.ஆர் சாலை, ரிப்பன் கட்டட சந்திப்பு, ராஜா முத்தையா சாலை உட்பட பல இடங்களில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பசுமைப் பந்தல் அமைப்பு!
சென்னையில் பசுமைப் பந்தல் அமைப்பு!@chennaicorp

வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் வகையில் சென்னையில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை எளிதில் தாண்டுகிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு அரசும், மருத்துவர்களும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இதனிடையே புதுச்சேரி, கோவை போன்ற இடங்களில் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் சிக்னல்களில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி, கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் மாநகராட்சி சார்பில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக அண்ணா நகர், சென்ட்ரல், பாரிமுனை, ஓ.எம்.ஆர் சாலை, ரிப்பன் கட்டட சந்திப்பு, ராஜா முத்தையா சாலை உட்பட பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ராஜா முத்தையா சாலை சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள பசுமைப் பந்தலினை பார்வையிட்டு வாகன ஓட்டிகளுடன் கலந்துரையாடினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in