

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 1 லட்சத்தை நெருங்கி, ரூ. 99,520-க்கு விற்பனை ஆகிறது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அவ்வப்போது புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 90,000-ஐ கடக்கத் தொடங்கியதும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தைத் தொட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தீபாவளிக்கு முன்பு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தைத் தொடவில்லை. தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகும் தங்கத்தின் விலை சற்று குறையத் தொடங்கியது. பிறகு, டிசம்பரிலிருந்து மீண்டும் படிப்படியாக விலை உயரத் தொடங்கியது.
குறிப்பாக கடந்த டிசம்பர் 15 அன்று ஒரு சவரன் தங்கம் ரூ. 1,01,200 ஆக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 145 உயர்ந்து ரூ. 12,505-க்கு விற்பனையானது. பின்னர் மீண்டும் குறைந்தது.
நேற்றைய நிலவரப்படி, மீண்டும் தங்கம் விலை உயர்ந்து இருந்தது. நேற்று (டிச. 17) கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400-க்கும், ஒரு சவரன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.99,000-ஐ தாண்டியது. இனிவரும் நாட்களில் ஏற்ற, இறக்கத்துடனேயே தங்கம் விலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் மேலும் உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.224-க்கும். ஒரு கிலோ ரூ. 2.24 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உலக நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குப் பெரும் சரிவைச் சந்திக்க இது முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. தங்கத்தின் விலையிலும் இது எதிரொலித்துள்ளது.
The price of one sovereign of ornamental gold has once again neared Rs. 1 lakh, selling at Rs. 99,520.