
அண்மைக் காலமாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தற்போது ஒரே நாளில் அதிரடியாகக் குறைந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அண்மையில் ஏறுமுகமாக உள்ளது. சர்வதேச அரசியல் சூழல் மற்றும் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் இறக்கத்தைச் சந்தித்திருப்பதால் உலகச் சந்தையில் தங்கத்தில் முதலீடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்தின் மீது எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் குறைந்திருக்கிறது. அதேபோல சவரனுக்கு 680 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,705 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 61,640 ரூபாய்க்கும் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.