புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 52000-க்கு விற்பனையாகிறது.
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!ANI

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்துள்ள நிலையில் கிராம் ஒன்று ரூ-6500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்துள்ளது. எனவே ஒரு சவரன் ரூ. 52000-க்கு விற்பனையாகிறது.

ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2000 அதிகரித்துள்ளது. கோடைக் காலத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும் நிலையில், தங்கத்தின் விலையும் அதிகரித்து புதிய உச்சததைத் தொட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.6430-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு 70 ரூபாயும், சவரனுக்கு 560 ரூபாயும் அதிகரித்து தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 52000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து, ரூ.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in