புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!

ஒரு கிராம் தங்கம் ரூ. 6640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!ANI

அட்சய திருதியை நெருங்கும் நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து கிராம் ஒன்று ரூ. 6640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்துள்ளது. எனவே ஒரு சவரன் ரூ. 53120-க்கு விற்பனையாகிறது.

ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1000 அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 6610-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு 240 ரூபாயும் அதிகரித்து தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 53120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளியின் விலையும் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டு, ரூ. 88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in