தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 சரிவு | Gold Rate

7 மாதங்களில் ரூ. 17,840 அளவுக்கு உயர்ந்த தங்கத்தின் விலை...
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 சரிவு | Gold Rate
ANI
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,000 குறைந்து ரூ. 74,040-க்கு விற்பனையாகிறது.

கடந்த செவ்வாய் அன்று ஒரு சவரனுக்கு ரூ. 840 உயர்ந்த தங்கத்தின் விலை புதன் அன்று ரூ. 760-க்கு உயர்ந்தது. இதனால் தங்கம் வாங்க இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கடந்த 7 நாள்களாகத் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து ரூ. 75 ஆயிரத்தைத் தாண்டியது. இது வரலாறு காணாத உச்சம் என்பதால் தங்கம் விலை மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

கடந்த ஜனவரி 1 அன்று தங்கத்தின் விலை ஒரு சவரன், ரூ. 57,200 ஆக இருந்தது. இந்நிலையில் 7 மாதங்களில் ரூ. 17,840 அளவுக்கு உயர்ந்த தங்கத்தின் விலை இன்று ஒரேடியாக ஆயிரம் ரூபாய்க்குச் சரிந்துள்ளது.

தங்கம் வாங்க இருந்த மக்களின் வரவேற்பைப் பெறும் வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,000 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 74,040-க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 125 குறைந்து ரூ. 9,255-க்கு விற்பனையாகிறது.

Gold Rate | Gold | Today's Gold Rate | Gold Rate declined |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in