ரூ. 91 ஆயிரத்தைக் கடந்த ஒரு சவரன் தங்கம்! | Gold Price |

ரூ. 91 ஆயிரத்தைக் கடந்த ஒரு சவரன் தங்கம்! | Gold Price |

தங்கம் விலை இன்று மட்டும் இருமுறை உயர்ந்தது.
Published on

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 91,080-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அண்மை நாள்களாகவே மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என்ற காலம் மலையேறி தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தைத் தொடும் நாள் வெகுதூரத்தில் இல்லை எனும் அளவுக்கு ரூ. 91 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச பொருளாதாரச் சூழல் உள்ளிட்டவை தங்கம் விலையைத் தீர்மானிக்கின்றன. கூடுதலாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளது தங்கம் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலும் இன்னும் முழுமையாகக் கைவிடப்படவில்லை.

இதன் காரணமாகவே, கடந்த சில நாள்களில் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்கிறது. இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 100 மற்றும் சவரனுக்கு ரூ. 800 உயர்ந்தது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 90 ஆயிரத்தைத் தாண்டி ரூ. 90,400-க்கு விற்பனையானது.

இன்றைய நாள் வர்த்தகம் நிறைவடையும் முன், தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ. 85 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 680 உயர்ந்துள்ளது. இதன்மூலம், இன்று மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,480 உயர்ந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் ரூ. 91,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 11,385-க்கு விற்பனையாகிறது.

Gold Price Hike | Gold Price | Gold |

logo
Kizhakku News
kizhakkunews.in