செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் அபராதம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் | GCC | Pet Dogs |

கழுத்துப்பட்டை அணிவிக்காமல் செல்லப்பிராணிகளை அழைத்து வந்தாலும் அபராதம் விதிக்கத் தீர்மானம்....
ரிப்பன் மாளிகை (கோப்புப்படம்)
ரிப்பன் மாளிகை (கோப்புப்படம்)ANI
1 min read

சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு நாய்களால் ஏற்படும் தொந்தரவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது, பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்க கூடாது. பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு செல்லப் பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர்கள் அழைத்துச் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

மேலும், சமீபத்தில் நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொறுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட வலைத்தள சேவை தொடங்கப்பட்டது. செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்படுவதும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. மைக்ரோ சிப் பொருத்தாத உரிமையாளருக்கு ரூ. 3,000 அபராதம் விதிக்கவும் முடிவெடுத்துக் கடந்த செப்டம்பர் 4 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் கூடியது. அதில், செல்லப்பிராணி வளர்ப்பு குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, சென்னையில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் உரிமையாளர்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்லும்போது வாய்மூடி, கழுத்துப் பட்டை அணிவிக்காவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். சென்னையில் செல்லப்பிராணிகள், தெருநாய்களின் விவரங்களைச் சேகரிக்க 2 லட்சம் மைக்ரோ சிப்கள் கொள்முதல் செய்யப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், செல்லப்பிராணி வளர்ப்பு தொடர்பான இந்த விதிமுறைகளை நவம்பர் 24 முதல் அமல்படுத்தவும் பெருநகர சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

Summary

Chennai Corporation Council passed resolution stating that a fine of Rs. 5,000 will be imposed if licenses are not obtained for pets kept in homes in Chennai.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in