அனைவரும் வாக்களிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
அனைவரும் வாக்களிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
படம்: https://twitter.com/ANI/status
1 min read

புதிய தலைமுறை வாக்காளர்கள் உள்பட அனைவரும் தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தலில் வாக்களித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சேலம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

சேலத்தில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "இன்று நடைபெறுகிற தேர்தலில் புதிய தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்" என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in