எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாக இருப்பது பெருமை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | Jayakumar |

செங்கோட்டையனுக்கு ஒரே ஒரு கருத்துதான், அவர் எங்கிருந்தாலும் வாழ்க...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (கோப்புப்படம்)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (கோப்புப்படம்)ANI
1 min read

எலிக்குத் தலையாக இருப்பதை விடப் புலிக்கு வாலாக இருப்பது பெருமைக்குரியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வரும் டிசம்பர் 5 அன்று நடைபெறவுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினத்தை ஒட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்காக அனுமதி வழங்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

“நான் பெரிதும் மதிக்கக் கூடியவர் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து தவெகவில் இணைந்துள்ளார். அதனால் ஒரு கருத்துதான் சொல்ல முடியும். எங்கிருந்தாலும் வாழ்க.. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் ஜெயக்குமாரும் செல்கிறார் என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. எனக்கு எப்போதும் ஒரே கட்சி தான்.. நேற்று, இன்று, நாளை.. ஏன் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன். யார் வீட்டின் முன்பாகவும் சென்று காத்திருப்பவன் நான் அல்ல.

புலிக்கு வாலாக இருப்பதே பெருமை.. ஆனால் எலிக்கு தலைவாக இருக்க கூடாது. இங்கே அதிமுக தான் புலி.. எலி என்று எந்தெந்த கட்சிகளை சொல்கிறேன் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். எனது வாழ்நாளில் புலிக்கு வாலாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். எலிக்கு தலையாக இருந்து பிரயோஜனம் கிடையாது. நான் திமுகவுக்கோ, தவெகவுக்கோ போக மாட்டேன். அது ஒருநாள் நடக்காது. அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் இருப்பதே எனக்கு பெருமை.. அதிமுக தான் சபாநாயகர், அமைச்சர், மாவட்டச் செயலாளர், மாணவரணி செயலாளர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்று 15க்கும் அதிகமாக பதவிகளை கொடுத்தது. அதனால் வாழ்நாள் முழுக்க எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழை பாடும் வானம்பாடியாகவே இருப்பேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன்” என்றார்.

Summary

Former Minister Jayakumar has said that it is more honorable to be the tail of a tiger than the head of a mouse.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in