நெல்லை காங். வேட்பாளருக்கு எதிராக காங். முன்னாள் எம்.பி. வேட்புமனு

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
நெல்லை காங். வேட்பாளருக்கு எதிராக காங். முன்னாள் எம்.பி. வேட்புமனு

திருநெல்வேலியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் புதுச்சேரி உள்பட மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மயிலாடுதுறை தவிர்த்து மீதமுள்ள 7 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். இந்த இரு தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவிப்பதில் காங்கிரஸ் தாமதப்படுத்தியது.

மார்ச் 25-ல் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ராபர்ட் புரூஸ் இன்று காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

எனினும், காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டது அந்தக் கட்சியில் சலசலப்பை உண்டாக்கியதாகத் தெரிகிறது. ஏற்கெனவே, காங்கிரஸ் வேட்பாளராக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பொருளாளர் பால்ராஜ் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவருக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையில், திருநெல்வேலி காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்புவும் அங்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும், நான் தான் காங்கிரஸ்காரன் என்றும் அவர் வெளியில் கூறிவிட்டுச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், திருநெல்வேலியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in