பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ: காவல் கட்டுப்பாட்டு அறையில் இணைய சேவை பாதிப்பு | BSNL Fire |

மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று காவல்துறை கணிப்பு...
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ: காவல் கட்டுப்பாட்டு அறையில் இணைய சேவை பாதிப்பு
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ: காவல் கட்டுப்பாட்டு அறையில் இணைய சேவை பாதிப்பு
1 min read

சென்னையில் பிஎஸ்என்எல் தென் மண்டல அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், காவல் கட்டுப்பாட்டு அறையில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் 8 மாடிகள் கொண்ட கட்டடத்தில் தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் இரண்டாவது தளத்தில் இன்று காலை திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது தளத்திலிருந்து தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. அதிகாலையிலேயே விபத்து ஏற்பட்டதால் அலுவலகத்தின் உள்ளிருந்த சில ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால், தீ அனைத்து தளங்களுக்கும் பரவியது. தகவலறிந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் பிஎஸ்என்எல் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையின் இணைய சேவை முடங்கியுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் இணைய சேவை தடைபட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் தொலைத்தொடர்பு முடங்கியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பேட்டரிகள் வெடித்ததில் மின்சாரம் கசிந்திருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Summary

Internet and telecommunication services have been disrupted in the police control room after a fire broke out at the BSNL South Zone office in Chennai.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in