போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாஃபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

இது குறித்த விசாரணை ஏப். 20-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாஃபர் சாதிக் உட்பட 5 பேரின் காவல் நீட்டிப்பு
ஜாஃபர் சாதிக் உட்பட 5 பேரின் காவல் நீட்டிப்பு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்றக் காவல் ஏப். 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக் கடந்த மார்ச் 9-ல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். ஜாஃபர் சாதிக் நடத்தி வந்த கும்பல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜாஃபர் சாதிக் உட்பட 5 பேரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகு இவர்களுக்கு எதிராக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

5 பேரின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 5 பேரின் நீதிமன்றக் காவலை மேலும் 4 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், இது குறித்த விசாரணை ஏப். 20-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in