விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 10 பேர் உயிரிழப்பு

பட்டாசுகளுக்கு மருந்து கலக்கும்போது உராய்வு ஏற்பட்டதால் விபத்து எனத் தகவல்
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

விருதுநகர் மாவட்டம் ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

ராமுத்தேவன்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணிகள் இன்று நடைபெற்று வந்தன. அப்போது பட்டாசுகளுக்கு மருந்து வைப்பதற்கானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் உராய்வு ஏற்பட்டபோது வெடிவிபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இடிபாடுகளுக்கு இடையே சிக்கி காயமடைந்திருப்பவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். இந்த வெடிவிபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in