சிவகாசியில் வெடிவிபத்து: 6 பேர் உயிரிழப்பு

விபத்தில் 7 அறைகள் தரைமட்டமாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்துள்ளது. இங்கு இன்று பிற்பகல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 அறைகள் தரைமட்டமாகியுள்ளன.

விபத்தில் பட்டாசு ஆலையிலிருந்த தொழிலாளர்கள் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 10-க்கு மேற்பட்டவர்கள் ஆலையில் இருந்ததாகவும், அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டமாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருதுநகர் மாவட்டம் ராமுத்தேவன்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் வரை உயிரிழந்தார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in