மீண்டும் அதிமுக ஆட்சி: ஜெயலலிதா நினைவு தினத்தில் இ.பி.எஸ். சூளுரை!

குடும்ப ஆட்சியில் தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்; மருமகன் அதிகாரம் செலுத்தும் போலி திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம்.
மீண்டும் அதிமுக ஆட்சி: ஜெயலலிதா நினைவு தினத்தில்  இ.பி.எஸ். சூளுரை!
1 min read

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்க சூளுரை ஏற்றுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த 5 டிசம்பர் 2016-ல் உடல்நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார் அன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று காலை ஜெயலாலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர். இதைத் தொடர்ந்து அதிமுகவினர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி பின்வருமாறு,

`குடும்ப ஆட்சியில் தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்; மருமகன் அதிகாரம் செலுத்தும் போலி திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம்’ என்றனர்.

ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,

`மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை, இந்த இயக்கத்தை, பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்காண பாதையில் தொடர்ந்து பயணிக்க உந்துசக்தியாய்த் திகழும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம். தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய "அமைதி, வளம், வளர்ச்சி" பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in