திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ. 9.29 லட்சம் கோடி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் வைத்துள்ளார்.
2025-26-ம் நிதியாண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். 2026-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தங்களுடைய ஆட்சியில் தாக்கல் செய்த கடைசி முழு நிதிநிலை அறிக்கை இது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்துள்ளன.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிதிநிலை அறிக்கை குறித்து விமர்சிக்கையில், தேர்தல் வாக்குறுதிகளாக திமுக கொடுத்த பல முக்கியமான வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு இந்த நிதிநிலை அறிக்கையிலும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ரூ. 46,467 கோடிக்கு பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் கடன் ரூ. 9.62 லட்சம் கோடியாக உள்ளதாகவும் நாட்டிலேயே மிக அதிகக் கடன் பெற்றி மாநிலமாகத் தமிழ்நாடு மாறியிருப்பதுதான் திமுக அரசின் சாதனை என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலையின் முழுப் பார்வை: