தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை!

29 தொகுதிகளில் அதிமுக 2-வது இடம் பிடித்துள்ளது. 10 தொகுதிகளில் பாஜக 2-வது இடம் பிடித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை!
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை!ANI

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருந்த நிலையில், 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் நடைபெற்ற தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

திருச்சி, திண்டுக்கல், நாகப்பட்டிணம், திருப்பூர், சிதம்பரம், கிருஷ்ணகிரி உட்பட 29 தொகுதிகளில் அதிமுக 2-வது இடம் பிடித்துள்ளது. திருப்பூர், சிதம்பரம், கிருஷ்ணகிரி உட்பட 10 தொகுதிகளில் பாஜக 2-வது இடம் பிடித்துள்ளது.

நாகப்பட்டிணம், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தை பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in