மக்களவைத் தேர்தல்: திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் எத்தனை?

திமுக 21 தொகுதிகளிலும், அதிமுக 33 தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிடுகின்றன.
திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் எத்தனை?
திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் எத்தனை?

மக்களவைத் தேர்தலில் திமுக- அதிமுக 18 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடவுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில், மீதமுள்ள 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில், மீதமுள்ள 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.

இந்நிலையில் திமுக - அதிமுக 18 தொகுதிகளில் நேரடியாக மோதவுள்ளன.

திமுக - அதிமுக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள்:

1) வடசென்னை

2) தென்சென்னை

3) ஸ்ரீபெரும்புதூர்

4) காஞ்சிபுரம் (தனி)

5) அரக்கோணம்

6) வேலூர்

7) தருமபுரி

8) திருவண்ணாமலை

9) ஆரணி

10) கள்ளக்குறிச்சி

11) சேலம்

12) ஈரோடு

13) நீலகிரி (தனி)

14) கோவை

15) பொள்ளாச்சி

16) பெரம்பலூர்

17) தேனி

18) தூத்துக்குடி

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in