ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி ANI

இது ஜனநாயகத்தின் திருவிழா: வாக்களித்த பிறகு தமிழக ஆளுநர் ரவி பேட்டி

நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, பரத் உள்ளிட்டோரும் வாக்களித்தார்கள்.
Published on

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வாக்களித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இது ஜனநாயகத்தின் திருவிழா. நான் இதில் பங்கேற்பதில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் இந்த திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக காட்பாடி டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் வாக்களித்தார்.

நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, பரத், யோகி பாபு, இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், ஹரி உள்ளிட்டோரும் வாக்களித்தார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in