சென்னை நீலாங்கரையில் வாக்களித்த விஜய்

விஜய் வருகையால், வாக்குச்சாவடியில் கூட்டம் அலைமோதியது.
விஜய்
விஜய்@tvkvijayhq

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

விஜய் வருகையால், வாக்குச்சாவடியில் கூட்டம் அலைமோதியது. பின்னர், பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்ட விஜய் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

ரஷ்யாவில் கோட் படப்பிடிப்புக்காக சென்றிருந்த விஜய், வாக்கு செலுத்துவதற்காக தனி விமானத்தில் சென்னை வந்ததாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in