தொலைபேசிக்கு அனுமதி இல்லை: சென்னையில் வாக்காளர்கள் வாக்குவாதம்

“வீட்டு வேலை செய்பவர்களுக்கு எப்படி விடுமுறை அளிப்பார்கள்?. ஒருவேளை எங்களுக்கு அழைப்பு வந்தால் நாங்கள் என்ன செய்வது?”.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

சென்னை தேனாம்பேட்டையில் வாக்கு மையத்திற்குள் தொலைபேசி எடுத்துச் செல்ல அனுமதிக்காததால் வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்கு மையத்திற்குள் தொலைபேசி எடுத்துச் செல்ல அனுமதிக்காததால் வாக்காளர்கள் பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒருசிலர் வாக்களிக்காமல் தங்களது வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.

ஏற்கெனவே தேர்தல் ஆணையம் வாக்கு மையத்திற்குள் தொலைபேசியை எடுத்துச் செல்லக்கூடாது என அறிவித்திருந்தது.

இந்நிலையில் அங்கு வந்த வாக்காளர்கள், “தினமும் கூலி வேலைக்காக செல்லும் நாங்கள் எப்படி தொலைபேசி இல்லாமல் இருப்பது?”, “எங்களது தொலைபேசியை யாரிடம் கொடுத்துவிட்டுச் செல்வது?”, “வீட்டு வேலை செய்பவர்களுக்கு எப்படி விடுமுறை அளிப்பார்கள்?. ஒருவேளை எங்களுக்கு அழைப்பு வந்தால் நாங்கள் என்ன செய்வது?” போன்ற கேள்விகளை எழுப்பியுளள்னர். இதனால் வாக்கு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in